தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் நடத்திய விக்ரவாண்டி மாநாட்டில் லட்சக்கணக்கான ரசி கர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண் டதைப் பார்த்து அனைத்துக் கட்சி களும் அசந்துவிட்டன. அதையடுத்து, தமிழகம் முழுவதுமுள்ள விஜய் மக்கள் இயக்கம் மற்றும் இளைஞர் அணியினர், ஊர்கள் தோறும் கட்சிக்கொடிகளை ஏற்றி, கட்சியை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தி லுள்ள வத்தலகுண்டு ஒன்றிய த.வெ.க. சார்பில் பேருந்து நிலையம் முன்பு கட்சியின் கொடி யேற்று நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. த.வெ.க. கிழக்கு மாவட் டச் செயலாளர் தேவா தலைமை வகித்தார். வத்தலகுண்டு ஒன்றியத் தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சத்ய நாராயணன் வரவேற்றார். கிழக்கு மாவட்டத் தலைவர் தேவா கொடியேற்றி வைத்ததும், "வருங்கால முதல்வர் விஜய் வாழ்க!, மாவட்டத் தலைவர் தேவா வாழ்க'' என கோசங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள். அப்போது அருகேயிருந்த விஜய் ரசிகர்களான மாவட்ட துணைச் செயலாளர் தினேஷ், வத்தலகுண்டு ஒன்றிய பொறுப்பாளர் அபினேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள், "பணத்தை வாங்கிக்கொண்டு பதவியைக் கொடுத்த மாவட்டத்தலைவர் தேவா ஒழிக! தலைவர் கட்சியை அடமானம் வைத்த தேவா ஒழிக!'' என மாவட்டத் தலைவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் விஜய் ரசிகர்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
மறுநாளே வத்தலக்குண்டு ஒன்றிய தலைவரான அபினேஷ் திடீரென தூக்க மாத்திரையைத் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம், விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"16 வருடங்களுக்கு முன்பு தலைவரின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து, எங்கள் ஒன்றியத்தில் 32 இடங்களில் கொடியேற்றி, 28 ஊர்களில் கிளை மன்றங்களையும் உருவாக்கி யிருக்கிறேன். இதற்காகப் பல லட்சங்களை செலவுசெய்து இயக்கத்தை வளர்த்து வந்தேன். அப்படியிருக்கும்போது திடீரென கிழக்கு மாவட்டத் தலைவரான தேவா பணத்தை வாங்கிக்கொண்டு ஒன்றிய பொறுப்புகளை வேறு சிலருக்கு போட்டுவிட்டார். அப்பெயர் களை கல்வெட்டில் பதித்து அவரே வந்து கொடியேற்றினார். ஆனால் தலைவர் தமிழகத்தி லுள்ள எந்த மாவட்டத்திலும் இன்னும் பொறுப்புகளைப் போடவில்லை. இவரே ஒன்றியப் பொறுப்புகளைப் போட்டிருக்கிறார். இதனால் எங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டது. அதனாலதான் மனம் நொந்து தூக்க மாத்திரை தின்றேன். எங்கள் வீட்டினர் என்னைக் காப்பாற்றிவிட்டனர். என் தற்கொலை முயற்சிக்கு காரணமே மா.செ. தேவா தான். இயக்கத்திற்காக பல்லாண்டுகளாக உழைத்தவர்களை மதிக்காமல், பணத்திற்கு விலைபோகிறார். இதுதொடர்பாக ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் நேரடி யாகத் தலைவரையும், பொதுச்செயலாள ரையும் சந்தித்து புகாரளிக்கவுள்ளோம்'' என்றார் வத்தலகுண்டு ஒன்றியத் தலைவரான அபினேஷ்.
கிழக்கு மாவட்ட மக்கள் இயக்கத்தலைவர் தேவா விடம் கேட்டபோது, "பட்டிவீரன்பட்டியில் கட்சிக்கொடியை ஏற்றிய போது தினேஷ், அபினேஷ், சூர்யா, உதயா உட்பட சிலர் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து, போலீஸ்வரை புகார் போய்விட்டது. நான் தலையிட்டுதான் கொடியேற்ற வைத்தேன். இத்தகவலை பொதுச்செயலாளரிடம் தெரிவித்தபோது டென்சனாகி, கட்சிக் கொடியை ஏற்றவிடாமல் செய்தவர்கள் கட்சியிலேயே இருக்கக்கூடாது, நடவடிக்கை எடுங்களென்று கூறினார். அதைத் தொடர்ந்து வத்தலகுண்டு ஒன்றியப் பொறுப்பாளர் களை நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளர் களைக்கொண்டு கொடியேற்றினேன். அந்த கொடியேற்று விழா கல்வெட்டில் பெயர்களோடு பொறுப்புக்களையும் போட்டுவிட்டனர். ஆனால் பொறுப்புக் களைப் போடக்கூடாது என அழித்துவிடச் சொல்லிவிட்டேன். போலீஸ் ஸ்டேசனில் கேட்டதால் தான் பொறுப்புகளை எழுதிக் கொடுத்தேன். அதை வைத்து கல்வெட்டில் போட்டுவிட்டனர். தலைவர் இனிமேல்தான் பொறுப்பாளர்களைப் போடுவார். அப்படியிருக்கும்போது நான் கொடியேற்ற வந்தபோது கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எனக்கு எதிராகக் கோஷமிட்டனர். அதையும் தலைமைக்குத் தெரியப்படுத்தியுள்ளேன்'' என்று கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை, விஜய் மக்கள் இயக்கம் மற்றும் இளைஞரணி என இரண்டு இயக்கங்கள் இருக்கு. ஆனால் கட்சியிலிருந்து இன்னும் பொறுப்புகள் போடவில்லை. அப்படி யிருக்கும்போது, சமீபத்தில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்திய நிகழ்வுகளை திண்டுக்கல் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இப்படி கொண்டாடியதில்கூட விஜய் மக்கள் இயக்கம் தனியாகவும், இளைஞரணி தனியாகவும் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஒரே கட்சியிலிருந்தும் ஒற்றுமையில்லாமல் இப்பவே கோஷ்டிப் பூசலில் இறங்கிவிட்டார்கள். விஜய் முழுமையாகக் களத்தில் இறங்குவதற்கு முன்பே விஜய் ரசிகர்களுக்குள்ளேயே கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கிறது.
-சக்தி